பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

0

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டே குறித்த விடுமுறை வழங்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply