அதிரடியாக பதவி நீக்கப்பட்ட அதிகாரி.

0

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திலக் வீரசிங்க தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றதை காரணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத அகழ்வுக்கு அனுமதி வழங்கியமை, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் அரசுடமையாக்கப்பட்டது.

அப்போது, அதனை விடுவிக்க முற்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply