இதற்கமைய இன்று முதல்(13.10.2022) கரையோர மார்க்க தொடருந்து சேவையில் ஈடுபடவிருக்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தொடருந்து சேவைகளில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு .
இன்று முதல் கரையோர மார்க்க தொடருந்து சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தொடருந்து மார்க்கத்தில் பயணிக்கும் சில தொடருந்துகள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னரோ பயணத்தை ஆரம்பிக்கும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு பெரும்பாலும் அலுவலக தொடருந்துகளுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில், குறித்த தொடருந்து நிலையங்களின் ஊடாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த தீர்மானம் தொடர்பில் தொடருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கோ அல்லது தொடர்பாடல் பிரிவுக்கோ நேற்று பிற்பகல் வரையில் உரிய வகையில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் திருத்தம் நடைமுறைக்கு வரும் திகதி குறித்து உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது



