இலங்கையில் கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

0

யாழ். குடா கடலில் அதிகரித்து வரும் கடல் அட்டை பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்கு தேவையான கடல் உணவை பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (04.10.2022) யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். குடா கடலின் பரப்புப் பகுதிகள் மீன் இனங்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகின்றன.

இந்நிலையில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்காக குறித்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதோடு பல பகுதிகளில் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பரப்பு கடல் சும்மா இருக்கிறது அதில் அட்டை பண்ணை அமைத்தால் என்ன என சிலர் நினைக்கிறார்கள். யாழ். குடாவின் பரப்பு கடல் பிரதேசத்தில் எமது மூதாதையர்கள் தொடக்கம் தற்போது வரை இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறுவதோடு மீன்கள் உற்பத்தியாகி ஆழ்கடலுக்கு செல்லும் பகுதியாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்குமானால் யாழ். மாவட்ட மக்களுக்கு தேவையான கடல் உணவை சில வருடங்களின் பின் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

Leave a Reply