இரவில் இந்த 1 பொருளை மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க.

0

நம் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை தினம் தினம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். இதில் சிலரைப் பார்த்து நாமே சொல்லுவதுண்டு, நன்றாகத்தான் வேலைக்கு போகிறார்கள், நன்றாக தான் சம்பாதிக்கிறார்கள் இருந்தாலும் போதவில்லை என்று புலம்புகிறார்களே, என்று அவர்களைப் பற்றி நாம் நினைப்போம்.

ஏன் இப்படி நாமே கூட புலம்பி இருப்போம். இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் நமக்கும் தெரியாது. கேட்பவர்களுக்கும் புரியாது. கைக்கு காசு வருவது மட்டுமே தெரியும். அது எந்த வகையில் எதற்காக செலவழிந்தது என்று யோசித்தால் அத்தனையும் வீணான செலவாகவே இருக்கும். நாம் இரவில் எடுத்துக் கொள்ளும் இந்த தயிரால் கூட நம் கையில் பணம் தங்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தயிரை பெரும்பாலும் நாம் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களின் ஒன்றாகவே கருதி வீடுகளில் எப்போதும் தயிர் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். தயிரை பகல் வேளையில் நாம் உண்ணும் போது இதற்கான பலன் வேறு விதமாகவும், இதே தயிரை இரவு சாப்பிடும் போது எடுத்து கொள்வதால் அதற்கான பலன் வேறு விதமாகவும் நமக்கு கிடைக்கிறது.

தயிரை பெரும்பாலும் இரவில் உறை ஊற்றி வைப்பார்கள். பாலில் ஒரு சொட்டு தயிர் ஊற்றி வைக்கும் போது இரவு முழுவதும் அந்த ஒரு சொட்டு தயிரானது முழு பாலையும் தயிராக்கி விடும். அப்படிப்பட்ட அந்த இரவு நேரத்தில் நீங்கள் இந்த தயிரை உண்ணும் போது நிச்சயம் உங்களுக்கு வறுமை நிலை தான் உருவாகும். பகலில் இந்த பால் முழுவதும் தயிராகி பிறர் பசியாற்ற தயாராகி இருக்கும் இந்த நேரங்களில் இதை உண்ணும் போது நமக்கு எந்த கேடும் இல்லை.

இயற்கையின் நியதிகளில் அவைகளுக்கு விதிக்கப்பட்ட பணிகளை சரியான முறையில் செய்து கொண்டு இருக்கும். இடையில் நாம் நம் விருப்பத்திற்கு அதை மாற்றும் பொழுது அதற்கான பலனை நாம் அனுபவத்தை ஆக வேண்டும். பகலில் தயிர் பிற பசி ஆற்றவும், இரவில் அடுத்த நாள் பசி ஆற்ற தனக்கான வேலையை அது செய்து கொண்டு இருக்கும். அந்த நேரத்தில் நாம் கட்டாயமாக தயிர் சாப்பிட கூடாது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் இரவில் தயிர் எடுக்கக் கூடாது. அது ஜீரண சக்தியை தடுத்துவிடும் என்றும் அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீகப் பூர்வமாகவும் உணர்ந்து இதுபோன்ற விஷயங்களை நமக்கு கூறி இருக்கிறார்கள். நாம் ஓரளவிற்கு அவர்களின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்தாலே பல பிரச்சனைகளை இல்லாமலே செய்து விடலாம்.

நமக்கு இது வரைக்கும் இது போன்ற விஷயங்கள் தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் இந்த பதிவை படித்து தெரிந்து கொண்ட பிறகாவது இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Leave a Reply