தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் எவை?

0

இந்தியாவில் 253 கட்சிகள் செயல்படாத கட்சிகள் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த கட்சிகள் தேர்தல் சின்னம் தொடர்பான பயன்களை தேர்தல் கமிஷனிடம் இருந்து பெற முடியாது.

அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அறிவித்தார்.

அவர் வெளியிட்ட பட்டியலில் உள்ள கட்சிகளின் பெயர் வருமாறு:-

தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய கட்சி, சமூக சமத்துவப்படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்துஸ்தான் தேசிய கட்சி ஆகியவை ஆகும்.

Leave a Reply