இலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை.

0

இலங்கையில் பச்சை குத்திக் கொள்ளும் பாதுகாப்பற்ற நடைமுறையால், இளைஞர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் தரம் இன்மை, வேலை செய்பவர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமையே இந்த நிலைக்கு காரணமாகும்.

உரிய பாதுகாப்பு மற்றும் தரம் இன்றி மேற்கொள்ளப்படும் இந்த பச்சை குத்தும் கலையினால் இரத்தத்தின் மூலம் ஹெபடைடிஸ் பி, எய்ட்ஸ், தோல் நோய்கள் போன்ற ஆபத்தான தொற்றுக்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தொழில் நடத்தும் நபர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், பச்சை குத்தும் தொழில்களை நடத்துபவர்களை பதிவு செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறான சட்ட ரீதியாக இன்றி இவ்வாறான தொழில்களை நடத்தும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகருக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஹலவத்த பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று பச்சை குத்தும் 12 வர்த்தக நிலையங்களை பரிசோதித்தது. இதன்போது அங்கிருந்தவர்களுக்கு முறையான பயிற்சி இல்லையெனவும் அங்குள்ள உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தரமானதாக இல்லை என கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply