தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால் இது தான் சகுனமா?

0

பொதுவாக தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் பொழுது, அதன் மூலம் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுமா? இல்லையா? அல்லது தள்ளிப் போக வாய்ப்புகள் உண்டா? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதைத் தான் நம் முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வந்தனர். ஏதாவது ஒரு விசேஷம், விழா என்றால் கண்டிப்பாக பூஜையில் தேங்காய் உடைத்து வழிபடுதல் என்பது செய்வது உண்டு.

ஆனால் இப்போது தேங்காய் உடைத்து பூஜை செய்வது குறைந்து விட்டது. நீங்கள் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் பொழுது, தேங்காய் அழுகி இருந்தால் நினைத்த காரியம் நடக்காதா? என்கிற பயம் தொற்றிக் கொண்டிருக்கும்.

இப்படி தேங்காய் உடைத்து வழிபடும் பொழுது தேங்காய் அழுகி இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் தள்ளி போகுமே தவிர, அது நடக்கவே நடக்காது என்பது கிடையாது இது தான் உண்மையான பலனாகும். எனவே இனி தேங்காய் உடைக்கும் போது அழுகி போயிருந்தால் பயப்பட வேண்டாம், நினைத்த காரியம் சற்று தள்ளி போக வாய்ப்புகள் உண்டு அவ்வளவுதான் ஆனால் அந்நேரத்தில் நீங்கள் நினைத்தது நடக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறவாதீர்கள்.

அதே போல தேங்காய் உடைக்கும் பொழுது மேல் பகுதி அதாவது கண் உள்ள பகுதி பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்து உங்களுக்கு கிடைத்தால் செல்வம் பெருகும் என்பது பலனாகும். நீங்கள் நினைத்தவற்றில் வெற்றி அடைந்து நல்ல லாபம் கிடைக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

தேங்காய் உடைக்கும் பொழுது கண் உள்ள பகுதி சிறியதாகவும், அடிப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும் என்பதை உணர்த்தும் பலனாக இருக்கிறது. இப்படி தேங்காய் உடைப்பதில் பலவிதமான பலன்கள் உண்டு. அது போல தேங்காய் சரி பாதியாக உடைந்தால் குடும்பத்தில் ஒற்றுமையும், மனக்கசப்புகளும் நீங்கும். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றியாகும் என்பது ஐதீகம்.

அதே போல தேங்காய் உடைக்கும் பொழுது சில சமயங்களில் உள்பாகத்தில் தேங்காய் உடைய சிறிய பாகம் அதனுள் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி தேங்காய்க்குள் தேங்காய் விழுந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப் போகிறது என்பது பலன் ஆகும். சகுனம் பார்ப்பதற்காக தேங்காய் உடைக்கும் பொழுது அதில் பூ விழுந்தால் உங்களுடைய ஆசைகளும், வேண்டுதல்களும் நிறைவேறும். தேங்காய் நீளவாக்கில் எப்போதும் உடைய கூடாது. இப்படி உடைந்தால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்கிறது சகுன பலன், எனவே தேங்காய் உடைக்கும் பொழுது சரியாக பொறுமையாக, நேர்த்தியாக உடைக்க பாருங்கள் நல்லதே நடக்கும்.

Leave a Reply