தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தகவல்.

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் கைதிகளில் 22 பேரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார் என தமிழீழ விடுதலைக் கழகத்தின் (TELO) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ குழுவை கடந்த சனிக்கிழமை (03) சந்தித்த போது ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்ட கைதிகள் புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாட்டில் பங்கேற்க முன்வருமாறும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்பட்ட வரும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply