எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது.

0

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அந்நிய செலாவணி நெருக்கடி ஓரளவு தணிக்கப்பட்டவுடன் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க  எதிர்பார்ப்பதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் நாளாந்த எரிபொருள் நுகர்வு 3000 லீட்டர்கள்  என தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதில் 10% லங்கா ஐஓசி  நிறுவனத்தினாலும், மீதமுள்ள 90% இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனத்தாலும் (CPC) வழங்கப்படுகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக இதுவரை 6.2 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள், 3.6 மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1.5 மில்லியன் மற்ற வாகனங்கள் ஆகும்.

எரிசக்தி அமைச்சு  தற்போது பொது போக்குவரத்தை சீராக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது, இதன் மூலம் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது.

ஒவ்வொரு வகை வாகனங்களின் தினசரி உபயோகத்தையும் கண்காணித்து கண்டறிந்து, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட எரிபொருள் தற்போது வழங்கப்படுகிறது என கூறினார்.


Leave a Reply