உச்சம் தொட்ட மருத்துவ கட்டணங்கள்: சிரமங்களை எதிர்நோக்கும் நோயாளிகள்.

0

இலங்கையில் மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளால் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன.

இந்நிலையில், தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையும் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ கட்டண அதிகரிப்பால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தனியார் வைத்தியசாலைகளில் சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ ஆலோசனை கட்டணமாக 2400 ரூபா அறவீடு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது அந்த தொகை 3500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply