இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 7,591 ஆக குறைந்தது.

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 9,436 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக 7,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 723 ஆக உயர்ந்தது.

அதே நேரம் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,206 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்து 993 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 84,931 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது நேற்றை விட 1,660 குறைவு ஆகும். நேற்று பலி எண்ணிக்கை 157 ஆக இருந்த நிலையில் இன்று 45 ஆக சரிந்துள்ளது.

மொத்த பலி எண்ணிக்கை 5,27,799 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply