சென்னையில் படிப்படியாக அதிகரிப்பு- பெண்கள் இலவச பஸ் பயணம் 11 லட்சத்தை எட்டியது.

0

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது.

இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செலவீனத்தை அரசு மாதந்தோறும் கணக்கிட்டு வழங்கி வருகிறது.

சென்னையில் 1559 சாதாரண பஸ்களில் பெண்கள் தற்போது கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

இத்திட்டம் தொடங்கப்பட்டபோது குறைந்த அளவில் தான் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனால் படிப்படியாக கூட்டம் அதிகரித்ததால் பஸ்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது.

தொடக்கத்தில் 5 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது 11 லட்சத்தை எட்டியுள்ளது.

தினமும் சராசரியாக 10.5 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள்.

இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கட்டணம் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பஸ்களை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் ‘பிங்க்’ நிறம் முன் மற்றும் பின்பகுதியில் பூசப்பட்டுள்ளது.

இதன் மூலம் மற்ற பஸ்களில் ஏறும் சம்பவம் குறைந்து உள்ளது. கட்டணம் இல்லாமல் பயணிக்க கூடிய இலவச பஸ் எது என்பதை வயதான பெண்கள் கூட கண்டு பிடித்து ஏறிவிடுகிறார்கள்.

தினமும் 10.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடந்த 16-ந்தேதி 11 லட்சம் பேர் அதிகபட்சமாக பயணித்து உள்ளனர் என்றார்.

Leave a Reply