இந்த வார இறுதியில் ஆரம்பமாகும்புதிய சேவை

0

கொழும்பு – பதுளை இடையில் சொகுசு புகையிரத சேவை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இயக்கப்படும் புதிய ரயிலுக்கு “எல்லா ஒடிஸி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சேவையில் இயக்கப்பட்டு, கொழும்பு கோட்டையிலிருந்து காலை 05.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55க்கு பதுளையை வந்தடையும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 09.50 மணிக்கு பதுளையிலிருந்து புறப்பட்டு இரவு 07.20 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படும்.

மேலும், வழியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் ரயில் நின்று செல்லும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – பதுளை ரயில் பாதை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் ஒன்றாகும்.

Leave a Reply