மேல்மாகாணத்தில் வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மேல்மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
.இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தற்போது ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 ஜூன் 29 முதல் 2022 ஓகஸ்ட் 31 வரை காலாவதியாகும் மேல் மாகாணத்தில் வாகன வருவாய் உரிமங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.



