
பெரும்பாலும் பலர் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று அசைவம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதற்கு காரணம் தெரியுமா?
புரட்டாசி மாதம் கோயில்களில், காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதும். அசைவ கடைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்திருப்பார்கள். காரணம் என்னவென்றால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது, சுத்தம் பத்தமாக இருக்க வேண்டும், விரதம் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் உண்மையிலேயே விரதம் இருப்பவர் பலருக்கு தெரியாது. ஏன் நாம் இந்த தெய்வத்துக்காக இருக்க வேண்டும் என்று.
புரட்டாசி மாதம் மட்டும், காலையில் வெயிலின் சூட்டுக்கு உருகி விடுவோம். மாலை மழைக்கும் குளிருக்கும் உறைந்து விடுவோம். அப்படி வெயிலும் வெளுத்து வாங்கும். மழையும் சளைத்தது அல்ல என்று போட்டி போடும். இடையில் திண்டாடுவது ஜீவராசிகள் அனைவரும் தான்.

இந்த மாதத்தின் தட்பவெட்பம் அப்படி தான் இருக்கும். இந்த நேரங்களில் நோய் எளிதாக தோற்று கொள்ளும். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான். மேலும் சூரியனின் தன்மை சற்று மங்கியே இருக்கும். இது போன்ற காலத்தில் அசைவம் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்று ஆகியவை ஏற்படும்.
எதை எப்படி சொன்னால் நமக்கு உரைக்கும் என்பது முன்னோர்களுக்கு தெரியும். அறிவியல் என்று சொன்னால் யாரும் செவி வரைக்கும் கூட எடுத்து கொள்ள மாட்டோம். அய்யோ சாமி கண்ண குத்தும்னு சொன்னால்தான் பலரும் ஏற்பர். இன்றுவரை அனைவரும் அப்படி தான் உள்ளார்கள், பெருமாள் என்ற பெயரில் அதை கடைபிடித்து கொண்டு.
துளசி தீர்த்தம் குடிப்பதற்கு காரணம், நோய் பரவி எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அந்நேரத்தில் இந்த தீர்த்தத்தை குடித்தால் நோய் தொற்று வராமல் நம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவையே பெருமாள், துளசி தீர்த்தம், அசைவம் ஆகியவைக்கான புரட்டாசி மாதம்! – Source: tamil.eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
