கொழும்பு போராட்டகாரகளுக்கு பொலிஸார் நாளைவரை காலக்கெடு விதித்துள்ள நிலையில், காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளமையானது கொழும்பில் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் நாளை மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்றுமாலை அறிவித்தது.
அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கூடாரங்களை அகற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்தனர்.
இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு அங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் நிமேஷ் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.



