கொழும்பில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்.

0

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்நேற்றைய தினம் (03-08-2022) மாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளையதினம் காலை 10.30 க்கு கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply