காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை.

0

ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து அதற்கு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் அதன் செயலாளர் ஒருவர் கோட்டை பொலிஸாருக்கு செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த நீதிமன்ற உத்தரவை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply