துப்பாக்கியை களவாடிய போராட்டக்காரர்கள்.

0

பொல்துவ சந்தியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்ட காரர்கள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை பொரளை பொலிஸ் நிலையத்தில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.       

Leave a Reply