யாழ்ப்பாணத்துக்கும் – கிளிநொச்சிக்கும் இடையே “யாழ்ராணி” என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல் நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும், யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும், யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.



