அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11மணி வரை யாழ்ப்பாணம் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் அறிவித்துள்ளார்.
அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினருக்கான பெற்றோல் விநியோகம் இன்று இடம்பெறவுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகம் காலை 11 மணி முதல் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகளை யாழ் மாவட்ட செயலகம் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
எனவே, இன்று காலை 11மணி வரையில் யாழ் மாவட்ட செயலத்தினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு அமைவாக பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



