மாதம் ஒரு நாள் இந்த தண்ணீரில் குளித்தால் நம் உடம்பை பிடித்த பீடை விலகும்.

0

இந்த மூலிகை குளியலுக்கு நமக்கு இரண்டு மூலிகை குச்சிகள் தேவைப்படும்.

செந்நாயுருவி குச்சி, கீழாநெல்லி குச்சி. இந்த இரண்டு செடிகளுமே கிராமப்புறங்களில் நிறைய இருக்கும்.

அந்த இடத்திலிருந்து தெரிந்தவர்களை கேட்டு இந்த இரண்டு செடியையும் சரியாக கண்டு பிடித்து அதிலிருந்து ஒரு சிறிய கிளையை உடைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இருக்கும் இலையை எடுத்து விட்டு ஒரு இரண்டு இன்ச் அளவு குச்சி இருந்தால் கூட போதும்.

அந்த குச்சியை வீட்டிற்கு எடுத்து வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி விடுங்கள். சுத்தமான எச்சில் படாத ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி, இந்த இரண்டு குச்சிகளையும் அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

இரவு முழுவதும் இந்த குச்சி தண்ணீரிலேயே ஊறட்டும். மறுநாள் காலை எழுந்து இந்த தண்ணீரை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரோடு கலந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த தண்ணீரை கலக்கலாம்.

பச்சை தண்ணீரில் தான் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

குறிப்பாக இந்த பரிகாரத்தை அமாவாசை தினங்களில் செய்யலாம் அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யலாம். அதாவது இந்த பரிகாரக் குளியலை குறிப்பிட்ட இந்த இரண்டு தினங்களில் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அமாவாசைக்கு முந்தைய நாள், நீங்கள் இந்த தீர்த்த தண்ணீரை உங்களுடைய வீட்டில் தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

அப்போதுதான் மறுநாள் அமாவாசை காலை நேரத்தில் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். –

மாதத்தில் ஒரு நாள் அமாவாசை தினம் அல்லது பௌர்ணமி தினம் ஏதாவது ஒரு நாளில் இந்த குளியலை போட்டால் கூட போதும். உங்கள் உடம்பை பிடித்த பீடை அனைத்தும் நீங்கிவிடும்.

முடிந்தவர்கள் மாதம் தோறும் செய்யலாம். அப்படி இல்லை என்றால் தொடர்ந்து மூன்று மாதம் இந்த மூலிகை தண்ணீரில் குளியுங்கள்.

அதன் பின்பு இரண்டு சில மாதம் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

மீண்டும் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும் போது தேவையற்ற பிரச்சனைகள் வரும் போது, எதுவுமே சரியாக நடக்கவில்லை ஏதோ உடம்பில் பிரச்சனை உள்ளது எனும்போது இந்த பரிகாரத்தை செய்து கொண்டால் கூட போதும். இந்த இரண்டு மூலிகை வேர்களுக்குமே அப்படி ஒரு அபரிவிதமான சக்தி உண்டு.

அந்த காலத்தில் சித்தர்கள் நிறைய நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக இந்த மூலிகை செடி வேர்களை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூலிகை செடியில் இருந்து வேரை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டும்.

மூலிகைச் செடி சாப நிவர்த்தி உங்களுக்கு செய்ய தெரியும் என்றால் நீங்கள் இந்த இரண்டு செடிகளின் வேரை எடுத்துக் கூட மேல் சொன்னபடி தண்ணீரில் போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து குளிப்பது இன்னும் அபரி விதமான பலனை கொடுக்கும்.

Leave a Reply