நாட்டில் எவரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

0

உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய உணவு நெருக்கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் உணவு நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக நிமல் லான்சா தலைமையில் நிமல் சிறிபால டி சில்வா, ஹர்ஷ டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

Leave a Reply