சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களின் செய்தியறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பெரலின் விலை 120 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

இருப்பினும் நேற்றைய தினம் கச்சா எண்ணெய் ஒரு பெரல் விலை 124 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply