தமிழகத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சப்பை.

0

திருப்பூர் பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளிதனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கற்றலில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.

இதனால் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 900 பேர் வரை படிக்கின்றனர்.

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு புதிய முயற்சியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆயிரம் மஞ்சள் பைகள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா கூறுகையில்,பள்ளியின் பல்வேறு சாதனைகளையும், பாலித்தீன் பயன்பாட்ைட குறைத்து பூமியை காப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். புதிதாகவரும் அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்படும்.

மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவே இம்முயற்சி. இவர்கள் மூலம் பெற்றோர்களிடம் போய்ச்சேரும் என்றார்.

Leave a Reply