சென்னையில் இருந்து திருப்பதி செல்ல 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.

0

தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கி வருகிறது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான சர்வரில் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யும் கால அவகாசம் 2 நாட்களில் இருந்து 7 நாட்களாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இனி சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல 7 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை சென்னை-2 என்ற முகவரியிலோ, 044-25333333, 25333444 என்ற தொலைபேசியிலோ 180042531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply