ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.

0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான அம்பிளிக்கை,இடைய கோட்டை, தங்கச்சிய ம்மாபட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு–வரப்படும் காய்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்ப–னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரை 1 கிலோ முருங்கை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.

அதன் பிறகு வரத்து சற்று அதிகரித்ததால் ரூ.50 வரை குறைந்தது.

தற்போது மேலும் விளைச்சல் அதிகரித்து வரத்தும் கூடியுள்ளதால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

பெரும்பாலான முருங்கை மும்பை, ெகால்கத்தா, பரோடா போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இருந்தபோதும் விளைச்சல் அதிகரித்துள்ள நிலை–யில் போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

இதே போல் தக்காளி 1 பெட்டி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையாகி வந்தது.

தற்போது ஒரு பெட்டி ரூ.400 என விலை குறைந்துள்ளது.

இதே போல் கத்தரிக்காய் ஒரு பை ரூ.450க்கு விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம் ரூ.20, வெண்டைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.20 என பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையிலும் காய்கறிகள் விலை குறைந்திருப்பது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

Leave a Reply