நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிவவி வருகின்றது.
இதனையடுத்து மக்கள் அதிகளவில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் கொழும்பு, மற்றும் வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக கடல்வழியாக வெளியேறி தமிழகத்தில் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், உள்நுழைவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவித்திருந்தன.



