எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் எரிவாயு பெறுவதில் பெரும் சிரமத்தை எதிருகொண்டுள்ளனர்.
மேலும் தினமும் நீண்டநேரம் காத்திருந்தே எரிவாயுவை பெறவேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் உள்ளனர்.
இதன்பிரகாரம் தமது அன்றாட வேலைகளைகூட செய்யமுடியாது , பொருட்களை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதே மக்களுக்கு இப்பொழுது வாடிக்கையாகிவிட்டதாக பல்லரும் வேதனைகளி வெளியிட்டுள்ளனர்.



