விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்..!

0

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.
விநாயகருக்கு அருகம்புல் உகந்தது. இது தவிர அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்வோம்.

மருத இலை – மகப்பேறு உண்டாகும். எருக்க இலை – குழந்தை பாக்கியம் உண்டாகும். அரச இலை – எதிரி தொல்லை நீங்கும். அகத்தி இலை – கவலை
விலகும். அரளி இலை – அன்பு நிலைக்கும். வில்வ இலை – இன்பம் பெருகும். வெள்ளெருக்கு – சகல சவுபாக்கியம் கிடைக்கும். மாதுளை இலை – கீர்த்தி உண்டாகும். கண்டங்கத்திரி இலை – லட்சுமி கடாட்சம் உண்டாகும்.- Source: tamil.webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply