ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த பணிப்புரை.

0

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இந்நிலையில் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை காண்பது தொடர்பான கலந்துரையாடல், கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.

மேலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

Leave a Reply