மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு.

0

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அத்துடன் விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக தமது உற்பத்திகளை பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதே நேரத்தில், நாட்டில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் , விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை உள்ளூர் சந்தைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பல மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் (ஒரு கிலோவுக்கு):

கோவா ரூ. 210-220

போஞ்சி – ரூ. 570-580

லீக்ஸ் ரூ. 175-180

கரட் – நுவரெலியா ரூ. 300-310

தக்காளி- ரூ. 490-500

முள்ளங்கி -ரூ. 150-180

நோகோல் – ரூ. 230-240

கெக்கரிக்காய் – ரூ. 70-80

வெள்ளரிக்காய் – ரூ. 90-100

உருளைக்கிழங்கு – நுவரெலியா ரூ. 250-260

பாகற்காய் – ரூ. 440-450

பூசணி – மலேசியன் ரூ. 100-110

கத்தரிக்காய் -ரூ. 240-250

முருங்கை – ரூ. 450-460 இற்கும் விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply