பொதுமக்களுக்கு காவற்துறையினர் விடுத்த எச்சரிக்கை.

0

நாட்டின் பல பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இதன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் இனந்தெரியாதவர்களினால் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறு பாடசாலையில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் காணாமல் போயுள்ளதுடன் மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது காவற்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வெளியூர்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக வந்து இங்கு தங்கியிருப்பவர்களின் விபரங்களை தெரிவிக்குமாறும், அது குறித்த திருட்டுக்களை கண்டுபிடிக்க காவற்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் சாய்ந்தமருது காவற்துறையினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply