இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மாலை 7.00 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply