மேலும் ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 3500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும் நாடு பூராகவும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் அனைவரும் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிவாயு அடுப்புக்கு மாற்றீடாக சில அடுப்புகள் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்ற போதிலும் அவற்றின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றது.



