கட்சித் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு.

0

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் முன்வைக்கப்படும் யோசனைகளை கருத்திற் கொண்டு உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அவ்வாறு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேச 21 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply