தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

0

தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காரணத்தினால் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்பிரகாரம் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஆறு மணித்தியால காலப்பகுதிக்குள் பாலிந்த – நுவர, புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக நீர்ப்பாச திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் புளத்சிங்கள, மொல்காவ வீதி, வரகாகொட, கலவெல்ல வீதி, நாலியத்த, தபல வீதி முதலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply