இந்திய உதவியின் கீழ் மற்றுமொரு உதவித் திட்டம் இலங்கைக்கு.

0

இந்திய உதவியின் கீழ் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை கொழும்பை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மருந்து பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சில உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகளே நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply