மனைவியின் சொல் பேச்சை ஒரு போதும் கேட்காத கணவரை கூட, மனைவி சொல்வதை மட்டும் கேட்க வைக்க 1 ஸ்பூன் சோம்பு போதும்.

0

நீங்கள் கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, நீங்கள் சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை உங்களுடைய பார்ட்னர் காது கொடுத்துக் கேட்க வாய்ப்பே இல்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தினமும் 1 ஸ்பூன் சோம்பு இருந்தால் போதும். எல்லார் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலும் இந்த சோம்பு இருக்கும்.

ஆகவே பிரச்சனை கிடையாது. தினம்தோறும்‌ 11 நாட்கள் தொடர்ந்து காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மனைவி இந்த பரிகாரத்தை செய்யும் போது ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, உங்களுடைய கணவரின் பெயரை 11 முறை சொல்லி விட்டு, உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் மனதார, உண்மையாக பிரார்த்தனை செய்து, அதன் பின்பு இந்த சோப்பை அப்படியே சமையல் போட்டு சமைத்து உங்கள் கணவருக்கு கொடுத்து விடுங்கள்.

11 நாளும் நீங்கள் இதை செய்ய வேண்டும். இதை கணவருக்கு தெரியாமல் செய்யலாம் தவறு கிடையாது. (தவறான எந்த விஷயத்திற்கும் இந்த பரிகாரம் நிச்சயம் பலிக்காது.) ஆண்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்வது கொஞ்சம் சிரமம்.

ஏனென்றால் உங்களால் இதை சமைத்து மனைவிக்கு கொடுக்க முடியாதல்லவா.

இவ்வாறாக கையில் சோப்பை வைத்துக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய மனைவியின் பெயரை 11 முறை உச்சரித்து இந்த சோம்பை எரிகின்ற நெருப்பில் போட்டு விடுங்கள்.

அந்தப் புகையில் இருந்து வாசம் வெளிவரும் அல்லவா. அந்தப் புகையை உங்களுடைய மனைவி சுவாசித்தால் போதும்.

ஒருவேளை சில வீடுகளில் கணவருக்கு சமைக்க வாய்ப்பு இருக்கும். அப்படி இருந்தால், நீங்கள் இந்த சோம்பை சமையலில் போட்டு சமைத்து உங்களுடைய மனைவிக்கு தாராளமாக கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம்.

மீண்டும் ஒரு முறை பதிவு செய்து கொள்கின்றோம். இந்த பரிகாரம் நல்ல விஷயத்திற்கு மட்டுமே பயன்படும்.

கெடுதல் நினைத்து யாரும் யாரையும் வசியம் செய்ய முடியாது. அவ்வளவு தாங்க. மிக மிக சுலபமான பரிகாரம் இது.

சொல் பேச்சு கேட்காத கணவன் மனைவி வாழ்க்கையை சரி செய்ய, வழிமாறி செல்லக்கூடிய கணவன் மனைவி தங்களுடைய வாழ்க்கையை நேர்வழியில் நடத்திச் செல்ல, வாழ்க்கையை நல்வழி படித்துக் கொள்ள இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.

நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply