குரங்கம்மை நோய் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

0

தற்போது உலக நாடுகள் பூராகவும் பரவலடையும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி முதல் இதுவரையில் உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி. சி. ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

மேலும் தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply