இந்த 5 பொருட்கள் உங்களுடைய வீட்டில் குறைய தொடங்கி விட்டால், உங்களுக்கு தீராத பணகஷ்டம் வரப்போகுது என்று அர்த்தம்.

0

முதலில் ஒரு வருடைய வீட்டில் எதிர்பாராமல் கூட உப்பு முழுமையாக சுத்தமாக தீர்ந்து போக கூடாது.

அப்படி நீங்கள் தெரியாமல் உப்பு வாங்க மறந்து விட்டால், அது உங்களுக்கு ஏதோ ஒரு பண பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்க போகிறது என்று அர்த்தம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் கவனமாக ஒரு உப்பு பாக்கெட்டை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக மஞ்சள் குங்குமம். வீட்டில் நெற்றியில் இட்டுக்கொள்ள கூடிய மஞ்சள் குங்குமமானது ஒருபோதும் சுத்தமாக காலியாக கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டுக்கு ஒரு சுமங்கலி பெண் வருகிறார்கள்.

அவர்களுக்கு குங்குமம் கொடுக்க சொல்றாங்க.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் பெண், வீட்டில் குங்குமம் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாது.

இதுவும் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு அறிகுறிதான்.

அடுத்தபடியாக அரிசி. என்றைக்குமே இந்த அரிசி நம்முடைய வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும்.

நாளைக்கு உலையில் போட அரிசி இல்லை என்ற வார்த்தை ஒரு வீட்டிலிருந்து வரவே கூடாது.

நான்கு பொருட்கள் ஆகிவிட்டது. உப்பு, மஞ்சள், குங்குமம், அரிசி, இந்த நான்கு பொருட்களும் உங்களுடைய வீட்டில் நிறைவாக இருந்தே ஆக வேண்டும்.

ஆமாங்க ஐந்தாவதாக சொல்லக்கூடிய விஷயம் பெண்களுடைய சந்தோஷம்தான். பெண்களுக்கு சந்தோஷம் குறைந்தால் கூட அந்த வீட்டிற்கு கஷ்டம் வரும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாளோ அந்த வீட்டின் என்னதான் காசு பணம் தங்கம் வைரம் வைடூரியம் இருந்தாலும், அந்த வீட்டில் சந்தோஷம் இருக்காது. பணம் இருந்தாலும் அது பிரயோஜனம் இல்லாத படமாகத்தான் இருக்கும்.

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்னை நிறைவோடு பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் சந்தோஷமும் செல்வ கடாட்சமும் நிலையாக நிலைத்து நிற்கும் என்பதும் சாஸ்திர ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான்.

உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி, பெண் குழந்தை, உடன்பிறந்தவர்கள், இவர்களை சந்தோஷப்படுத்தி தான் பாருங்களேன்.

வீட்டில் பண கஷ்டம் இருக்காது. மன கஷ்டம் இருக்காது. வேறு எந்த பிரச்சனையும் வராது. உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மேற்சொன்ன விஷயங்களை முயற்சி செய்து தான் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

Leave a Reply