தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது.
அத்துடன் தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராட்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை 650 முதல் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



