அபாய கட்டத்தை நெருங்கும் இலங்கை.

0

மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
0000000
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி..!!

தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.

தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது.

இதனை அவர்கள் மறுக்கவில்லை.

ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது.

மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பிறகு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நிக்கி கல்ராணி கூறியிருந்தார்.

அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply