விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெற்றிக் டன் இடத்தை இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமரினால் அமைக்கப்பட்ட குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறபோக பயிற்சியை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



