சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.

0

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என குறித்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

ஆகவே பொது மக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply