எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.



