முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு.

0

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்நிலையில் தமிழர் மனங்களின் ஆறாதவடுவாக முள்ளிவாய்க்கால் பேரவலம் உள்ளது.

அத்துடன் ராஜபக்ச குடும்பத்தின் கொடூர தன்மையை வெளிக்காட்டி முள்ளிவாக்க்கால் படுகொலையில், தந்தையை, தாயை பிள்ளைகளை , இன்னும் பல உறவுகளை தொலைத்த நாளாய் முள்ளிவாய்க்கால் படுகொலை அமைத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

வருடாந்தம் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply