வன்முறையில் கைதானோரின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு.

0

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதானோர் எண்ணிக்கை 664 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் ல் கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 67 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply