மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்கின்றனர்.

0

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல சுயேச்சை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply